பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு - 2020
பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 35 விண்ணப்பதாரர்கள் 02.09.2020 அன்று சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டனர். 07/09/2020 கண்டாவளை பிரதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக அதிகாரிகளினால் அலுவலக அமைப்பு மற்றும் அதன் அன்றாட சேவைகள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டன.



இலத்திரனியல் குடும்ப அட்டை (e-family card) அறிமுகப்படுத்தல் நிகழ்வு
இலங்கையில் முதல் முதலாக இலத்திரணியல் வடிவ குடும்ப விபர அட்டை கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு 18/09/2020 கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த இலத்திரணியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் இலத்திரணியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர் பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத்தினை பெற்றக்கொள்வதற்கு அல்லது சேவையை பெற்றக்கொள்வதற்கு இலகுபடுத்தலாக குறித்த இலத்திரணியல் குடும்ப அட்டை பயன்தரவுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தனது தலைமையுரையில் தெரிவித்தார். சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் பிரஜை குறிதத் இலத்திரணியல் அட்டையை சமர்ப்பிக்கும்போது இலகுவாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார். அதில் வாழ்வாதாரம், வீடு, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தேவையுடையவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் இன்றுமுதல் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் தமது குடும்ப விபரங்களை இலத்திரணியல் இலகுபுடுத்தலின் ஊடாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது, குறித்த இலத்திரணியல் குடும்ப அட்டையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிற்கு குறித்த இலத்திரணியல் அட்டை வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நாளின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டிப்பட்டன. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி ஜி எஸ் செனெரத்யபோ, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன், 571வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் டி கே எஸ் கே டொலகே, 572வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டி எம் பி பி டசநாயக, கரைச்சி, பூநகரி பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
















